Jul 16, 2026
Thisaigal NewsYouTube
ரெப்பாவில் தீ விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ். வீரப்பன் நேரில் சென்று உடனடி நிதியுதவி
தற்போதைய செய்திகள்

ரெப்பாவில் தீ விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ். வீரப்பன் நேரில் சென்று உடனடி நிதியுதவி

Share:

சிரம்பான், ஜூலை.16-

நெகிரி செம்பிலான், தம்பின், ரெப்பா, கம்போங் பாரு தம்பின் பகுதியில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் முகமட் அலி பின் அகமட் என்பவருக்குச் சொந்தமான சேமிப்புக் கிடங்கு முற்றிலும் எரிந்து சாம்பலானது.

இவ்விபத்து குறித்துத் தகவலறிந்த மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் ரெப்பா முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். வீரப்பன், கம்போங் பாரு தம்பின் JPKK தலைவருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். தீ அருகில் உள்ள வீடுகளுக்குப் பரவாமல் தடுக்க தீயணைப்புத் துறையினரைத் தொடர்பு கொண்டு மீட்புப் பணிகளை அவர் முடுக்கி விட்டார்.

பாதிக்கப்பட்ட முகமட் அலியிடம் நிலவரத்தைக் கேட்டறிந்த வீரப்பன், அவரின் குடும்பச் சுமையைக் குறைக்கும் நோக்கில், தனது சொந்தப் பணத்திலிருந்து ஆயிரிம் ரிங்கிட் உடனடி ஆரம்ப நிதியுதவியாக வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட கிடங்கைச் சீரமைக்க அரசாங்கத்தின் இதர பொருத்தமான உதவிகளைப் பெற்றுத் தர முயற்சிப்பதாக உறுதியளித்த அவர், குடும்பத்தினருக்குத் தனது ஆறுதலையும் தைரியத்தையும் தெரிவித்தார்.

Related News