Dec 4, 2025
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை நிரூபிக்க ஹாடிக்கு 48 மணி நேரம் !
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை நிரூபிக்க ஹாடிக்கு 48 மணி நேரம் !

Share:

தாமும் தமது கட்சியும் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் என பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து அந்தக் கூற்றை ஹாடி மீட்டுக் கொள்ளவோ அல்லது குற்றச்சாட்டை நிரூபிக்கவோ 48 மணி நேரம் கொடுப்பதாக ஜசெகாவின் மூத்த ஆலோசகர் லிம் கியாட் சாங் கூறினார்.

அவ்வாறு செய்யத் தவறினால், ஹாடி நீதிமன்றத்தில் வழக்கைச் சந்திக்க நேரிடும் என்றார் லிம் கிட் சியாங்.
கிட் சியாங், சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் மறைந்த லீ குவான் யூ, முன்னாள் கம்யூனிஸ்ட் தலைவர் மறைந்த சின் பெங் ஆகிய மூவரும் உறவினர் என்று கெபாலா பாத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்துரா முஹாமாட் வெளியிட்டக் கூற்றைத் தொடர்ந்து வழக்குத் தொடர இருப்பதாக லிம் கிட் சியாங் குறிப்பிட்டார்.

மேலும், அக்கூற்றை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்துரா அதனை நிரூபிக்க லிம் கிட் சியாங்கின் மகனான லிம் குவாங் எங் 48 மணி நேர கால அவகாசத்தைக் கொடுத்திருக்கிறார். அது நாளை வியாழக்கிழமை முடிவடைகிறது.

ஜசெகவும் தாமும் மலாய்க்காரகளுக்கும் இஸ்லாத்திற்கும் மலாய் ஆட்சியாளர்களுக்கும் எதிரானவர்கள் எனவும் கம்யூனிஸ்டுகள் எனவும் இஸ்லாம் மீது ஒரு பயத்தை ஏற்படுத்தும் பரப்புரையை மேற்கொள்வதாகக் கூறப்படுவதும் அறிவுக்கொவ்வாத ஒன்று, சித்தி மஸ்தூராவின் அந்தக் கூற்று தற்போது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது என்று கிட் சியாங் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.

அதே சமயம், கெபாலா பாத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்துரா கூற்றுக்கு எதிராக தெலுக் இந்தான் ஜசெகவின் செயலாளர் பட்ரூல் ஹிஷாம் பின் படாருடின் பின் பாஹாருடின் தலைமையில் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
சித்தி மஸ்துராவின் அவதூறான கூற்றுக்குத் தமது தரப்பு பலத்தக் கண்டனத்தைத் தெரிவிப்பதாகவும் ஜசெகவின் மீது அவநம்பிக்கையையும் தவறானப் புரிதலையும் ஏற்படுத்தும் என பட்ரூல் ஹிஷாம் குறிப்பிட்டார்.

Related News