Jul 1, 2026
Thisaigal NewsYouTube
இந்திரா காந்தி மேல்முறையீடு: புதிய ஆதாரங்களைச் சேர்க்க நீதிமன்றம் மறுப்பு
தற்போதைய செய்திகள்

இந்திரா காந்தி மேல்முறையீடு: புதிய ஆதாரங்களைச் சேர்க்க நீதிமன்றம் மறுப்பு

Share:

தனது முன்னாள் கணவர் முகமது ரிதுவான் அப்துல்லா என்ற கே. பத்மநாபன் இருக்கும் இடம் குறித்த புதிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க பாலர் பள்ளி முன்னாள் ஆசிரியை எம். இந்திரா காந்தி மேற்கொண்ட முயற்சி இன்று தோல்வியடைந்தது.

அரசாங்கத்தின் புடி95 மற்றும் சாரா நிதியுதவித் திட்டங்களை ரிதுவான் பயன்படுத்தியதாகக் கூறப்படும் புதிய தகவல்களை ஆதாரமாக ஏற்க புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த ஆதாரங்கள் உயர் நீதிமன்ற விசாரணையின் போது இல்லை என்றாலும், வழக்கின் இறுதித் தீர்ப்பை மாற்றும் அளவிற்கு இவை வலுவானவை அல்ல என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற நீதிபதி முகமது ஜைனி மஸ்லான் தெரிவித்தார்.

தனது மகள் பிரசன்னா டிக்சாவை கண்டுபிடிக்கத் தவறியதாகக் கூறி போலீஸ் துறை மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இந்திரா காந்தி தாக்கல் செய்த 100 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரும் வழக்கின் ஒரு பகுதியாக இந்த மேல்முறையீடு அமைந்தது.

16 ஆண்டுகளுக்கு முன்பு தனது 11 மாதக் குழந்தையான பிரசன்னா டிக்சாவை முன்னாள் கணவர் கடத்திச் சென்ற நிலையில், மகளை மீட்க இந்திரா காந்தி இன்றும் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

4 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை