May 20, 2026
Thisaigal NewsYouTube
யூ.பி.எஸ்.ஆர். தேர்வு இல்லாததால் சிரமம்
தற்போதைய செய்திகள்

யூ.பி.எஸ்.ஆர். தேர்வு இல்லாததால் சிரமம்

Share:

தொடக்கக்கல்வி மாணவர்கள், தங்களின் ஆறாம் ஆண்டு கல்வியை முடித்து விட்டு, எம்ஆர்எஸ்எம் எனப்பபடும் மக்தாப் ரென்டா சைன்ஸ் மாரா கல்லூரிகளில் சேர்க்கப்படுவதற்கு அந்த மாணவர்களின் அடைவு நிலையை மதீப்பீடு செய்வதற்கு யூ.பி.எஸ்.ஆர் தேர்வு ஓர் அளவுகோலாக இருந்து வந்தது. தற்போது யூ.பி.எஸ்.ஆர் தேர்வு இல்லாததால் தொடக்க கல்வியை முடிகின்ற மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்வதில் எம்ஆர்எஸ்எம் கல்லூரிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக மாரா தலைவர் டத்தோ ஶ்ரீ அஷ்ராஃப் வஜ்டி டுசுக்கி தெரிவித்துள்ளார்.

யூ.பி.எஸ்.ஆர் தேர்வு இல்லாததால், சம்பந்தப்பட்ட மாணவர்களின் உண்மையான திறனை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எம்ஆர்எஸ்எம் கல்லூரிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு யூ.பி.எஸ்.ஆர் சான்றிதழ், ஒரு வழிகாட்டலாக பயன்படுத்தப்பட்டு இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News