Dec 2, 2025
Thisaigal NewsYouTube
புதிய பாடத்திட்ட  முறை
தற்போதைய செய்திகள்

புதிய பாடத்திட்ட முறை

Share:

நாட்டில் உள்ள உயர் கல்வி கூடங்களில், 'Hybrid' எனப்படும் கலப்பின கற்றல் முறை மற்றும் நெகிழ்வான கல்வி அட்டவணையை உயர்கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்தப் புதிய அமைப்பின் மூலம், உயர் கல்விக்கூட மாணவர்கள் தங்களின் முதலாம் மற்றும் இறுதி ஆண்டு பாடத்திட்டத்தை மட்டுமே உயர் கல்விக்கூடத்திற்குச் சென்று நேரடி கற்றலின் மூலம் பெறுவர்.
மீதம் உள்ள ஆண்டுகளின் கற்றல் கற்பித்தல் முறையை, மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்றாற் போல், நேரடி கற்றல் அல்லது வீட்டிலிருந்த படியே இயங்கலை வழி கற்றல் என அவர்களே தேர்வு செய்யும் சுதந்திரத்தை உயர்க்கல்வி அமைச்சு அவர்களுக்கு வழங்கியுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் காலீட் நூர் டின் தெரிவித்தார்.

இதுவரை, நாடு முழுவதும் உள்ள 20 பொதுப் பல்கலைக்கழகங்களில், 19 பல்கலைக்கழகங்கள், 2023/2024 கல்வி அமர்வு தொடங்கி, இந்த நெகிழ்வான கற்றல் முறையைச் செயல்படுத்த தயாராக உள்ளதாக முகமட் காலீட் குறிப்பிட்டார்.

Related News