Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மகனை சித்ரவதை செய்ததாக தாயார் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மகனை சித்ரவதை செய்ததாக தாயார் மீது குற்றச்சாட்டு

Share:

தனது ஏழு வயது மகனை சித்ரவதை செய்தது மற்றும் கவனிக்காமல் விட்டது தொடர்பில் அச்சிறுவனின் தாயாரும், அவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாக கூறப்படும் ஆண் குண இயல்புகளை கொண்ட பெண் ஒருவரும் ஜோகூர்பாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

அச்சிறுவனின் தாயாரான 27 வயது நுருல் அஷிகின் முஹமாட் சாஹிர் மற்றும் அவரிடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் 30 வயது அவின் சுவா என்ற பெண்ணும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு,குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

இவ்விருவரும் கடந்த ஜுலை முதல் தேதிக்கும் ஆகஸ்ட் 9 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஜோகூர் பாரு, பாசீர் கூடாங்கில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து தன்னார்வக் குழுவினர் அந்த வீட்டிற்குள் நுழைந்து, சித்ரவதைக்கு ஆளான அந்த 7 வயது சிறுவனை மீட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News