காஜாங், சுங்காய் லோங் கில் மனைவியை கண்மூடித்தனமாக அடித்து காயங்களை விளைவித்து, அவரின் மரணத்திற்கு காரணமானவர் என்று நம்பப்படும் ஆடவர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.
மனைவியை தனியார் மருத்துவமனையில் சேர்த்தப் பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 32 வயதுடைய அந்த மாது சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஜெய்த் ஹாசன் தெரிவித்தார்.
தமது மனைவி இறந்து விட்டார் என்பதை அறிந்தப் பின்னரே 32 வயதுடைய அந்த நபர் தலைமறைவாகி விட்டதாக நம்பப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் அந்த தனியார் மருத்துவமனையின் தாதி ஒருவர் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து சவப்பரிசோதனைக்காக அந்த மாதுவின் உடல் செர்டாங் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக Mohd Zaid Hassan குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


