பூச்சோங், அக்டோபர்.30-
நாட்டில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு நட்மா எனப்படும் தேசியப் பேரிடர் நிர்வாக ஏஜென்சி தயார் நிலையில் இருப்பதாக அதன் தலைவர் டத்தோ அப்துல் ஹாலிம் ஹம்ஸா தெரிவித்தார்.
வட கிழக்கு பருவமழை நவம்பர் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனத்த மழையினால் வெள்ளம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக தஞ்சம் புகுவதற்கு ஏதுவாக நாடு முழுவதும் 8,940 நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
போலீஸ் படை, இராணுவப் படை, பொது தற்காப்புப் படை, தீயணைப்பு மீட்புப் படை உட்பட பல்வேறு அரசாங்க ஏஜென்சிகளின் ஒத்துழைப்புடன் ஒரு லட்சத்து மூவாயிரத்து 500 பேர் கொண்ட ஆள் பலத்துடன் நட்மா தற்போது தயாராக இருப்பதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அப்துல் ஹாலிம் தெரிவித்தார்.








