May 4, 2026
Thisaigal NewsYouTube
14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 நண்பர்கள் மீது வழக்கு: விசாரணை கோரினர்
தற்போதைய செய்திகள்

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 நண்பர்கள் மீது வழக்கு: விசாரணை கோரினர்

Share:

கிள்ளான், பிப்ரவரி.20-

இரண்டு வாரங்களுக்கு முன்பு புஞ்சாக் ஆலாம் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில், 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நண்பர்கள், கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.

விற்பனை நிர்வாகியான 25 வயது இர்ஃபான் முஹமட் மற்றும் பொது உயர் கல்வி கல்விக்கூட மாணவனான 25 வயது அஹ்மாட் ஹம்ஸி அலியாஸ் ஆகிய இருவர் மீதும் தனித்தனியாகக் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

நீதிபதி சித்தி அமினா காஸாலி முன்னிலையில் இருவரும் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தன்மை விளக்கப்பட்டன.

கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் அந்த வாடகை வீட்டின் அறையில் சிறுமிக்கு எதிராக இர்ஃபான் இக்கொடூரச் செயலைச் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதே சிறுமிக்கு எதிராக, அதே இடத்தில் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி அதிகாலை 5.30 மணி அளவில் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஹம்ஸி அலியாஸ் எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News