Jul 31, 2026
Thisaigal NewsYouTube
சைபர் பாதுகாப்புச் சட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது
தற்போதைய செய்திகள்

சைபர் பாதுகாப்புச் சட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது

Share:

புத்ராஜெயா,ஆகஸ்ட் 26-

இணையம் வழி நடத்தப்படும் தாக்குதல், ஊடுருவல் மற்றும் அச்சுறுத்தலை தடுக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான சைபர் பாதுகாப்பு சட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இந்த புதிய சட்டத்திற்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடந்த ஜுன் 18 ஆம் தேதி அங்கீகாரம் வழங்கியுள்ளார். ஜுன் 26 ஆம் தேதி அரசாங்க பதிவேட்டில் இடம் பெறச்செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் விளக்கினார்.

தேசிய சைபர் பாதுகாப்பு நடவடிக்கைக்குழு ஒன்றை அமைப்பது, சைபர் பாதுகாப்பை வலுப்படுத்துவது உட்பட இணையம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்படுத்துவதற்கு இந்த சட்டம் வகை செய்வதாக பிரதமர் தெளிவுபடுத்தினார்.

Related News