ஹரிராயா பெருநாளை முன்னீட்டு ஏப்ரல் 19, 20, 21 மற்றும் 24 ஆம் தேதி என நான்கு நாட்களுக்கு வழங்கப்பட்ட நெடுஞ்சாலையின் இலவச டோல் கட்டணம் சேவை இன்று இரவு 11.59 மணிக்கு முடிவுக்கு வருகின்றது என பிளாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஹ்மா உதவித்திட்டத்தின் கீழ் நாட்டின் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வர் அறிவித்திருந்தா 33 நெடுஞ்சாலைக்களுக்கான நான்கு நாட்கள் இலவச டோல் கட்டண சேவை திட்டம் இன்று இரவு முடிவுக்கு வருவதால் நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள் Touch n Go மற்றும் e-Wallet அட்டையில் பணம் இருப்பதை உறுதிச் செய்து கொள்ளுமாறு அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.








