மலாக்கா, அக்டோபர்.15-
நேற்று இரவு மலாக்காவின் அலோர் காஜாவில் உள்ள தாமான் செம்பாக்கா 2, டுரியான் துங்காலில் உள்ள ஒரு வீட்டில், இரு வங்க தேச ஆடவர்களின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது.
சகோதரர்களான இருவரில், ஒருவர் மற்றொருவரைக் கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நேற்று இரவு 7 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், இரண்டு சகோதரர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதத்தை அண்டை வீட்டுக்காரர்கள் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், இரவு 10.45 மணியளவில் சகோதரர்கள் இருவரின் சடலங்களையும் மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளதாக மலாக்கா காவல்துறைத் தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார் தெரிவித்துள்ளார்.








