Oct 14, 2026
Thisaigal NewsYouTube

8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் நிதி ஒதுக்கீடு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் நிதி ஒதுக்கீடு

எஸ்பிஎம், எஸ்டிபிஎம் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் 8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த, மித்ரா 901,680 ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.

மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் மித்ரா, கல்வி அமைச்சுடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் 7,897 எஸ்பிஎம் மாணவர்களும் 793 எஸ்டிபிஎம் மாணவர்களும் பயனடைவார்கள். இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மடானி அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று பெட்டாலிங் ஜெயா, மெனாரா பிஏசியில் சிலாங்கூரைச் சேர்ந்த சுமார் 300 எஸ்பிஎம் மாணவர்கள் பங்கேற்ற தமிழ்மொழித் திறன் மேம்பாட்டுப் பட்டறையைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாணவர்கள் தமிழ்மொழிப் பாடத்தில் சிறந்த தேர்ச்சி பெறவும், பொதுத் தேர்வுகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் தேவையான கல்விசார் ஆதரவை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். தமிழ்மொழி என்பது தேர்வுக்கான பாடம் மட்டுமல்ல; அது மொழி, பண்பாடு மற்றும் அடையாளத்தின் முக்கிய அங்கம் என்றும் டத்தோ ஸ்ரீ ரமணன் வலியுறுத்தினார்.

கல்வி அமைச்சு மற்றும் மாநிலக் கல்வித் துறைகளுடன் இணைந்து இந்திய மாணவர்களின் கல்வி அடைவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மித்ரா தொடர்ந்து வலுப்படுத்தவுள்ளது என்றும் டத்தோ ஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ, மித்ரா தலைமை இயக்குநர் கே. ரவீந்திரன் நாயர் உள்ளிட்ட அதிகாரிகளும் 50 கல்வியாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும்; நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்!’ – அந்தோணி லோக்கிற்கு அன்வார் பகிரங்க ஆதரவு

ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும்; நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்!’ – அந்தோணி லோக்கிற்கு அன்வார் பகிரங்க ஆதரவு

தீபாவளிக்கு முன்பாக 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி! அந்தோணி லோக் உறுதி

தீபாவளிக்கு முன்பாக 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி! அந்தோணி லோக் உறுதி