பினாங்கை சேர்ந்த ஆறாம் படிவ மாணவன் டி.நவீன் கொலை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு நபர்களின் தற்காப்பு வாதங்கள் நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்தத் தவறியுள்ளதாக அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.
பினாங்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் அம்ரில் ஜோஹாரி இதனைத் தெரிவித்தார். வழக்குத் தரப்பின் விசாரணையின்போது முன்வைக்கப்பட்ட தற்காப்பு விளக்கங்களுக்கும், அண்மையில் குற்றஞ்சாட்டப்பட்டோர் அளித்த சாட்சியங்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாக அவர் கூறினார்.
மேலும், தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரின் வாதத்துக்கு மருத்துவ அறிக்கை ஆதாரமாக இல்லை என்றும் அரசுத் தரப்பு சுட்டிக்காட்டியது. அதேவேளையில், நவீனுக்கு ஏற்பட்ட உயிரிழப்பை ஏற்படுத்திய காயங்கள் எங்கு, எவ்வாறு ஏற்பட்டன என்பதில் நியாயமான சந்தேகம் இருப்பதாகத் தற்காப்புத் தரப்பு வாதிட்டது.
கூடுதல் வாதங்களைத் தாக்கல் செய்வதற்காக, வழக்கு நிர்வாகத்தை வரும் நவம்பர் 16ஆம் தேதிக்கு நீதிபதி ராட்ஸி அப்துல் ஹாமிட் ஒத்திவைத்தார்.








