Oct 14, 2026
Thisaigal NewsYouTube

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா? என்று மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணனை, ஜசெக இளைஞர் பிரிவான டாப்சி (DAPSY) தேசியத் தலைவர் வூ கா லியோங் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தீபாவளியை ‘Happy Diwali’ என்று குறிப்பிடுவதா அல்லது ‘Happy Deepavali’ என்று குறிப்பிடுவதா என்ற விவாதத்தை முன்வைத்து, மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சரவணனை வூ கா லியோங் சாடினார்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, கோலாலம்பூர் பங்சார் பகுதியில் உள்ள விஇ ஹாட்டல் & ரெசிடென்சில் டாப்சி ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான தீபாவளி விருந்து நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

‘Diwali’, ‘Deepavali’ ஆகிய சொற்கள் வட இந்தியா, தென் இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் பயன்படுத்தப்படும் பெயர் வேறுபாடுகள் என்றும், முக்கியமானது வாழ்த்தின் நல்லெண்ணமும் அதன் அர்த்தமும்தான் என்றும் வூ கா லியோங் கூறினார்.

மேலும், நாட்டின் வரவு செலவுத் திட்டம் 2027 மற்றும் இந்தியச் சமூகத்தின் நலன் சார்ந்த கொள்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பதற்குப் பதிலாக, வாழ்த்து வார்த்தையை மையமாகக் கொண்டு சரவணன் விமர்சிப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹான்னா இயோவை சரவணன், விமர்சித்திருப்பதையும் பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினருமான வூ கா லியோங் சுட்டிக் காட்டினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்