Oct 14, 2026
Thisaigal NewsYouTube

தீபாவளிக்கு முன்பாக 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி! அந்தோணி லோக் உறுதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தீபாவளிக்கு முன்பாக 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி! அந்தோணி லோக் உறுதி

நாடு முழுவதும் உள்ள டாக்சி, வாடகைக் கார் மற்றும் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி, தீபாவளிக்கு முன்பாக வழங்கி முடிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உறுதியளித்துள்ளார்.

புத்ராஜெயாவில் உள்ள போக்குவரத்து அமைச்சில் இன்று நடைபெற்ற நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த உதவியைப் பெறுவதற்கு ஓட்டுநர்கள் தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. செல்லுபடியாகும் பொதுச் சேவை வாகன ஓட்டுநர் உரிமமான பிஎஸ்வி வைத்திருக்கும் தகுதியான ஓட்டுநர்களின் விவரங்கள் அரசாங்கத் தரவுத்தளங்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு, நேரடியாகவோ வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியோ உதவி வழங்கப்படும்.

நாடு முழுவதும் 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் இந்த உதவியால் பயனடைவார்கள். முதல் கட்டமாக இன்று 500 ஓட்டுநர்களுக்கு நேரடியாக உதவி வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கான இந்த உதவித் தொகை கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு, இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அந்தோணி லோக் விளக்கினார்.

சிறப்புத் தொடர் வாகனப் பதிவு எண்கள் விற்பனை மூலம் கிடைத்த 91 மில்லியன் ரிங்கிட் வருவாயிலிருந்து இந்த உதவிக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 1,000 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி, எதிர்காலத்தில் அரசாங்கத்துக்குக் கிடைக்கும் கூடுதல் வருவாயைப் பொறுத்தே வழங்கப்படும் என்பதையும் அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும்; நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்!’ – அந்தோணி லோக்கிற்கு அன்வார் பகிரங்க ஆதரவு

ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும்; நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்!’ – அந்தோணி லோக்கிற்கு அன்வார் பகிரங்க ஆதரவு

8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் நிதி ஒதுக்கீடு

8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் நிதி ஒதுக்கீடு