கோலாலம்பூர், நவம்பர்.20-
சரவாக் மாநில பணி நியமனங்களை ஆசிரியர்கள் பலர் நிராகரிப்பதற்கான காரணம் குறித்து கல்வி அமைச்சு விசாரணை மேற்கொள்கிறது.
கடந்த திங்கட்கிழமை ஆசிரியர் சேர்க்கைக்கான பதிவு நடைபெற்ற போது, ஆசிரியர்கள் பலர் தங்களைப் பதிவு செய்து கொள்ளவில்லை என கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.
சரவாக் மாநிலத்தில் பணியாற்ற ஆசிரியர்கள் தயங்குவது குறித்த முழு விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் அது குறித்து தகவல் தெரிவிப்பதாகவும் ஃபாட்லீனா சீடேக் குறிப்பிட்டார்.
இதனிடையே, சரவாக் சிறப்பு ஆசிரியர் சேர்க்கை திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட 7 ஆசிரியர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், பணி நியமனம் செய்யப்பட்ட மேலும் 51 ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்பதை சரவாக் கல்வித்துறை உறுதிப்படுத்தியுள்ளது.








