Jul 30, 2026
Thisaigal NewsYouTube
அடையாள ஆவணங்கள் ஒப்படைப்பு நிகழ்வு
தற்போதைய செய்திகள்

அடையாள ஆவணங்கள் ஒப்படைப்பு நிகழ்வு

Share:

சிலாங்கூர், ஜூலை 29-

அடையாளப் பத்திரங்கள் இல்லாதவர்களுக்கு
உதவும் நோக்கில் சிலாங்கூர் மாநில அரசினால் அமைக்கப்பட்ட மைசெல் ( MYSEL ) அமைப்பு, நீல அடையாளக் கார்டு, பிறப்பு பத்திரம், குடியுரிமை மற்றும் தத்தெடுப்புச் சான்றிதழ் உள்ளிட்ட அடையாள ஆவணங்கள் தொடர்பில் இதுவரையில் 6 ஆயிரம் விண்ணப்பங்களை பெற்றுள்ளது.

இதில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் தொடர்புடைய அடையாள ஆவணப்பிரச்னைகளுக்கு வெற்றிகரமான தீர்வு காணப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு கூறினார்.

இன்று திங்கட்கிழமை ஷா ஆலாமில், சிலாங்கூர் மாநில அரசாங்க செயலக கட்டட அலுவலகத்தில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான மைசெல் அடையாள ஆவணங்கள் மையத் திட்டத்தின் கீழ் அடையாள ஆவணம் கிடைக்கப்பெற்ற மனுதாரர்களுக்கு அந்த முக்கிய ஆவணங்களை ஒப்படைக்கும் நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில் பாப்பாராயுடு இதனை தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறை ஆட்சிக்குழு மற்றும் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த நிகழ்வை சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்தார்.

இந்நிகழ்வில் 80 வயது மூதாட்டிக்கு MyKad நீல நிற அடையாள அட்டையை மந்திரி பெசார் Dato Seri Amirudin Shari தமது கையாளல் நேரடியாக வழங்கினார்.

சிலாங்கூர் மாநிலத்தில் ஆவணப்பிரச்னைகளுக்கு வெற்றிகரமாக தீர்வு கண்டு வரும் மைசெல் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் பாபா ராயுடுவிற்கு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தமது பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார்.

இந்நிகழ்வில் செராஸை சேர்ந்த மூன்றாம் படிவ மாணவி சரண்யாவிற்கு நீல நிற அடையாள கார்டு கிடைத்து இருப்பது குறித்து ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராயுடு பெருமிதம் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில் அடையாள ஆவணமில்லாதவர்கள் முறையான அணுமுறையுடன் தங்களை நாடி வரும் பட்சத்தில் சிலாங்கூர் மாநில அரசின் முற்போக்கான சிந்தனையால், இப்பிரச்னைக்கு தீர்வு காண தாங்கள் தயாராக இருப்பதாக பாப்பாராயுடு செய்தியாளர்களிடம் விவரித்தார்.

நீல நிற அடையாள ஆவணம் கிடைத்து இருப்பது மூலம் இதுநாள் வரை தாம் எதிர்நோக்கியிருந்த பிரச்னைக்கு தீர்வு கண்டு உதவிய சிலாங்கூர் அரசுக்கு மாணவி சரண்யா தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

வீ. பாப்பாராயுடு,
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை