Dec 5, 2025
Thisaigal NewsYouTube
குட்டி விவகாரத்தைத் தீர்த்துக் கொள்ள துன் மகாதீரும் ஸாஹிட்டும் ஒப்புதல்
தற்போதைய செய்திகள்

குட்டி விவகாரத்தைத் தீர்த்துக் கொள்ள துன் மகாதீரும் ஸாஹிட்டும் ஒப்புதல்

Share:

கோலாலம்பூர், ஜூலை.22-

தாம் ஒரு இந்திய முஸ்லீம் என்றும், தாம் இந்தியா, கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்றும், தமது உண்மையான பெயர் இஸ்கண்டார் குட்டி என்றும் அவதூறு பரப்பியதாக அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடிக்கு எதிராக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தொடுத்துள்ள சிவில் வழக்கைச் சுமூகமாகத் தீர்த்துக் கொள்வதற்கு இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

துணைப்பிரதமரும், பாரிசான் நேஷனல் தலைவருமான அஹ்மாட் ஸாஹிட்டுக்கு எதிராகத் தாம் தொடுத்துள்ள அவதூறு வழக்கை மீட்டுக் கொள்வதற்கு துன் மகாதீர் ஒப்புதல் தெரிவித்து இருப்பதாக உயர் நீதிமன்ற நீதித்துறை ஆணையர் கான் தேசியோங்கிடம் தெரிவிக்கப்பட்டது.

100 வயது, அகவையை எட்டியுள்ள துன் மகாதீர், தம்மை இஸ்கண்டார் குட்டி என்று சிறுமைப்படுத்தியது மூலம் நாட்டின் முன்னாள் பிரதமர் என்ற முறையில் தமக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

அத்துடன் பொதுத் தேர்தலில் லங்காவி நாடாளுமன்றத் தொகுதியைத் தற்காத்துக் கொள்ளாமல் போனதற்கும், மலாய்க்கார்களின் செல்வாக்கை இழந்ததற்கும், தம்மை, இந்தியா, கேரளாவைப் பூர்வீகமாகக் கூறியதும் ஒரு காரணம் என்றும் துன் மகாதீர், 73 வயதான அஹ்மாட் ஸாஹிட்டுக்கு எதிராக இந்த அவதூறு வழக்கைத் தொடுத்து இருந்தார்.

Related News