Oct 19, 2026
Thisaigal NewsYouTube

பத்து லட்சம் சந்தாதாரர்களை பெற்று மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார் நிலா லிங்கேஷ்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பத்து லட்சம் சந்தாதாரர்களை பெற்று மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார் நிலா லிங்கேஷ்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 14-

சமூக வலைத்தளங்களில் Content Creater எனும் உள்ளடக்கத்தை உருவாக்குபவராகவும், / தன்னம்பிக்கை வார்த்தைக்கு சொந்தக்காரராகவும், / நடனக் கலைஞராகவும்,/ நடிகையாகவும், /தொழில்முனைவராகவும் / பல்வேறு பரிணாமங்களில் தன்னை செதுக்கிக்கொண்டவரான நிலா லிங்கேஷ், இந்தியர்களின் அலைவரிசையில் அதிக எண்ணிக்கையிலான சந்தாதாரர்களை பெற்றதற்காக மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பவனி வரும் பிரபலங்களில் ஒருவராக விளங்கும் ஜோகூர்பாருவைச் சேர்ந்த நிலாவின் இந்த குறிப்பிட்ட சாதனையானது, அவர் முன்பு பெற்ற பெற்ற Silver Play Button சாதனையை விட பத்து லட்சத்திற்கும் அதிகமான சந்தாதார்களை தாண்டிய நிலையில் You Tube’s Gold Play Button- சாதனையையும் எட்டிப்பிடித்துள்ளார்.

நிலாவின் இந்த சாதனைக் குறித்து அவரிடம் வினவிய போது, சமூக ஊடகங்களில் தன்னம்பிக்கைத் தரும் உற்சாகமிகுந்த பேச்சுகளில் தொடங்கி, குட்டிக் கதைகள் வரை பகிர்ந்து கொண்டதில் பார்வையாளர்களின் பரவலான அங்கீகாரத்தை குறிப்பாக You Tube அலைவரிசையின் வாயிலாக பெற்றேன் என்று மிகுந்த தன்னடக்கத்துடன் குறிப்பிட்டார்.

இந்தியாவில் Tik Tok தடை செய்யப்பட்டதிலிருந்து அங்குள்ள எனது ரசிகர்களுக்கு You Tube மூலமாக பேசியிருக்கிறேன். உள்ளடக்கத்தை பதிவேற்றம் செய்து இருக்கிறேன்.

You Tube குறும்படங்கள், எனது ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. அது எனக்கு வியப்பைத் தந்தது. என்னுடைய உள்ளடக்கத்தை வரவேற்று, ரசித்து வருகின்ற அவர்களுக்கு இன்றும் நன்றி பெருக்குடன் இருக்கிறேன் என்று நிலா விவரித்தார். .

நிலா என்ற ஒரு மலேசியப் பெண், சமூக ஊடகத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமான சந்தாதார்களை பெற்றிருப்பது என்பது ஒரு குறுகிய சாதனை அல்ல. அபாரமானதாகும், அசாத்தியமானதாகும்.

நிலாவின் இந்த சாதனைக்கும், வெற்றிக்கும் அவரது ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் அவரின் கணவரின் பங்களிப்பும், ஆதரவும் அளப்பரியதாகும் என்பது மறுப்பதற்கில்லை.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →