அந்நிய நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண் சுற்றுப்பயணிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்து, அவர்களை மானபங்கம் செய்ததாக நம்பப்படும் ஒருசுற்றுலா வழிகாட்டியை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
27 வயதுடைய அந்த சுற்றலா வழிகாட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை சபா, செம்போர்னா உல்லாசத் தீவில் கைது செய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் முகமது லீ அப்துல்லா தெரிவித்துள்ளார்.
அந்த சுற்றுலா வழிகாட்டினால் மானபங்கம் செய்யப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் செய்து கொண்ட போலீஸ் புகாரைத்தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டதாக முகமது லீ அப்துல்லா குறிப்பிட்டார்.








