கோலாலம்பூர், அக்டோபர்.18-
பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு முழு பொறுப்பையும் ஏற்பதாக கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடேக் இன்று உறுதி தெரிவித்துள்ளார்.
அண்மைய காலமாக பள்ளிகளில் நிகழ்ந்து வரும் குற்றச்செயல்கள் சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கு தார்மீக பொறுப்பேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொலை, பாலியல் தாக்குதல் போன்ற குற்றற்செயல்கள் எதிர்காலத்தில் பள்ளிகளில் நிகழாமல் இருப்பதை உறுதிச் செய்வதற்கு அனைத்து கல்விக்கழகங்களிலும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றம் நல்வாழ்வுக்கு தேவையான சீர்திருத்தங்களைச் செய்வதற்கு கல்வி அமைச்சு முழுமையாக உறுதி பூண்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.