கோலாலம்பூர், செப்டம்பர்.22-
கோலாலம்பூரிலுள்ள The Exchange TRX மாலில் அமைந்திருக்கும் Apple Store-க்குள் நுழைந்த பாலஸ்தீன ஆதரவாளர்கள் சிலர், பாலஸ்தீன விவகாரம் தொடர்பாக ஐபோன் 17-ஐப் புறக்கணிக்க வேண்டுமென்று கூறி கோஷமிட்டனர்.
அண்மையில் நடந்துள்ள இச்சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் தற்போது பரவி வருகின்றது.
கையில், பாலஸ்தீன ஆதரவுப் பதாகைகளைச் சுமந்து கொண்டு கோஷமிட்ட அவர்களை, அந்த வணிக வளாகத்தின் பாதுகாவலர்கள் அங்கிருந்து வெளியே செல்லும்படி கோரிக்கை விடுத்தனர்.
அடுத்த சில நிமிடங்களில், போராட்டவாதிகள் அங்கிருந்து கலைந்து செல்வது போல் அக்காணொளியில் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.








