ஜோகூர் பாரு, செப்டம்பர்.24-
வயது குறைந்த தனது மைத்துனியைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக ஆடவர் ஒருவர், ஜோகூர் பாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
31 வயதுடைய அந்த நபர், நீதிபதி மடிஹா ஸைனோல் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. கடந்த ஜுலை மாதம் ஜோகூர், பொந்தியான், சயாங் பெனுட், கம்போங் பாரிட் லாபிஸில் 15 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அந்த நபருக்கு எதிராகக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








