ஷா ஆலாம், அக்டோபர்.19-
சபாக் பெர்ணம் மாவட்டத்தில் நேற்று மாலை நடந்த இரு வெவ்வேறு சாலை விபத்துகளில், 22 வயது இளைஞர் உட்பட இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் விபத்தில், அம்பாங்கைச் சேர்ந்த வாரச் சந்தையில் வேலை செய்யும் ஓர் இளைஞர், சுங்கை பெசார் அருகே வேன் மீது மோதிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என சபாக் பெர்ணம் மாவட்டக் காவற்படையின் தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் யூசோஃப் அஹ்மாட் தெரிவித்தார்.
இரண்டாவது சோகச் சம்பவத்தில், செகின்சானுக்கு அருகே புதன்கிழமை நடந்த விபத்தில் U TURN எடுத்த போது கார் மோதியதில் படுகாயமடைந்த 82 வயது முதியவர், மூன்று நாட்கள் உயிருக்குப் போராடிய நிலையில் இன்று அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.