கோலாலம்பூர், ஜனவரி.31-
கோலாலம்பூர் மாநகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுல்தான் அப்துல் சமாட் கட்டிடத்தின் முதற்கட்டப் பாதுகாப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். பழமை மாறாமல் நவீன வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ள இக்கட்டிடத்தின் முதல் கட்ட புணரமைப்பு நிகழ்வில் மாமன்னருடன் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் பல முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் உரையாற்றிய பிரதமர், மாமன்னரின் கரங்களால் தொடக்கி வைக்கப்பட்ட இத்திட்டம் மலேசியாவின் வரலாற்றைப் பாதுகாப்பதில் ஒரு முக்கிய மைல்கல் என்று குறிப்பிட்டார்.
பாரம்பரியக் கட்டிடங்கள் வெறும் சுவர்களாக முடங்கிக் கிடக்காமல், அவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், சுற்றுலாத் துறைக்கும் உயிர் கொடுக்கும் மையங்களாக மாற வேண்டும் என்ற அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மாமன்னரின் இந்த வருகை மேலும் வலுப்படுத்துவதாகப் பிரதமர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.








