கோலாலம்பூர், ஜனவரி.31-
கோலாலம்பூர் புக்கிட் டிண்டிங்கில் 75 டிகிரி சரிவான பகுதியில் சுமார் 20 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த 'ஸ்பைடர்மேன்' உடை அணிந்த இளைஞர் ஒருவர் , பொது பாதுகாப்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டார்.
சவாலான நிலப்பரப்பில் சுமார் 1 கிலோமீட்டர் மலையேறி, முதலுதவிக்கு பின் அவர் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.
நேற்று வெள்ளிக்கிமை சுமார் 20 மீட்டர் உயரத்திலிருந்து 75 டிகிரி சரிவான பகுதியில் விழுந்த அந்த நபரை மீட்கும் பணி சவாலானதாக அமைந்தது. மீட்புக் குழுவினர் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் மலைப்பாதையில் பயணித்து, பின்னர் தடம் இல்லாத அடர்ந்த பகுதியில் மேலும் 70 மீட்டர் தூரம் சென்று அவரை அடைந்தனர்.
கடுமையான போராட்டத்திற்குப் பிறகு மாலை 5.54 மணியளவில் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டு, காயமடைந்த அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








