செபூத்தே, ஜனவரி.31-
செபூத்தே பகுதியில் கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல், போலீஸ் மற்றும் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய ஓப்ஸ் காசாக் என்ற கூட்டு அமலாக்க நடவடிக்கையின் போது சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த 4 கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உரிய வணிக உரிமம் இன்றி வெளிநாட்டவர்களால் நடத்தப்பட்டு வந்த அந்த கடைகள் உடனடியாக மூடப்பட்டன.
இந்நிலையில், அக்கடைகளில் முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகப் பணியாற்றி வந்த 20 இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே வேளையில், தூய்மைக் குறைபாடு, தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனை, வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் 16 ஆண்கள், 4 பெண்கள் இருந்ததாக டிபிகேஎல்லின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.








