கோலாலம்பூர், ஜனவரி.31-
குறைந்த மாணவர் சேர்க்கை காரணமாகப் பள்ளிகள் மூடப்படாது என துணை கல்வி அமைச்சர் வோங் கா வோ உறுதியளித்துள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி, மொத்தம் 3,164 பள்ளிகளில், 150-க்கும் குறைவான மாணவர்கள் பயில்வதால், அவை குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட பள்ளிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பள்ளிகளோ அல்லது தாய்மொழிப் பள்ளிகளோ குறைந்த மாணவர்கள் சேர்க்கையைக் காரணம் காட்டி மூடப்படாது என்று வோங் கா வோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த பள்ளிகளுக்கு அவற்றின் பாரம்பரியம், வரலாறு மற்றும் சமூகங்களுக்குள் வலுவான உணர்வுப்பூர்வமான பிணைப்பு இருப்பதை அமைச்சு புரிந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில், அப்பள்ளிகளின் நிலைத்தன்மையை உறுதிச் செய்வதற்காக, அமைச்சு மிகவும் பொருத்தமான அணுகுமுறையை மேற்கொள்ளும் என்றும் வோங் தெரிவித்துள்ளார்.








