Jan 30, 2026
Thisaigal NewsYouTube
சமூக வருகை அனுமதிச் சீட்டைத் தவறாகப் பயன்படுத்திய 55,000 வெளிநாட்டினர் மீது நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

சமூக வருகை அனுமதிச் சீட்டைத் தவறாகப் பயன்படுத்திய 55,000 வெளிநாட்டினர் மீது நடவடிக்கை

Share:

கோலாலம்பூர், ஜனவரி.30-

மலேசியாவில் சோசியல் விசிட் பாஸ் எனப்படும் சமூக வருகை அனுமதிச் சீட்டைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்து, பின்னர் சட்டவிரோதமாக வேலை செய்த சுமார் 55,000 வெளிநாட்டினர் மீது அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டில் மொத்தம் 51,100 வழக்குகளும், 2026 ஜனவரி நடுப்பகுதி வரை 3,691 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

சமூக வருகை அனுமதிச் சீட்டுகளைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினருக்கு எதிராகக் கடுமையான அமலாக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

சுற்றுலா அல்லது உறவினர்களைப் பார்ப்பதற்காக நாட்டிற்குள் வருபவர்கள், இங்கு வேலை செய்வது கண்டறியப்பட்டால் அது சட்டமீறலாகும் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபாமி ஃபாட்சீல் கூறினார்.

சமூக வருகை அனுமதிச் சீட்டுகளைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினருக்கு எதிராகக் கடுமையான அமலாக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார் என்பதையும் அவர் விளக்கினார்.

Related News