Jan 30, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்து பெண்ணிடம் கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

தாய்லாந்து பெண்ணிடம் கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், ஜனவரி.30-

கடந்த டிசம்பர் மாதம் தாய்லாந்து பெண் ஒருவரிடம் ஆயுதத்தைக் காட்டி கொள்ளையடித்தது மற்றும் அவருக்கு எதிராக இயற்கைக்கு மாறாக உடலுறவு கொண்டதாக லாரி ஒட்டுநர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

32 வயது லாரி ஓட்டுநர் ஜி. லோகநாதன் என்ற அந்த லாரி ஓட்டுநர், நீதிபதி டாக்டர் அஸ்ரோல் அப்துல்லா முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் கோலாலம்பூர், தாமான் கெம்பிராவில் திருப்புளி மற்றும் இரும்பு அடிக்கோலை ஆயுதமாகப் பயன்படுத்தி அந்தப் பெண்ணிடமிருந்து 300 ரிங்கிட் பணத்தைப் பறித்ததாக லோகநாதன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாகக் கொண்டு சென்று, தாமான் மீடாவில் உள்ள ஓர் இடத்தில் காரினுள் இயற்கைக்கு மாறாக பாலியல் வன்கொடுமைப் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

இந்தக் குற்றங்கள் மிகவும் பாரதூரமானவை என்பதாலும், குற்றம் சாட்டப்பட்டவர் தப்பியோடவோ அல்லது சாட்சிகளைக் கலைக்கவோ வாய்ப்புள்ளதாலும் அவருக்கு பிணை வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர் முஹமட் இக்வான் முஹமட் நாசீர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இருப்பினும், லோகநாதனுக்கு குடலிறக்கம் நோய் இருப்பதால் அவருக்கு சிகிச்சை தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு பிணை வழங்க அவரது வழக்கறிஞர் சரண்பால் சிங் கோரினார். ஆனால், நீதிபதி டாக்டர் அஸ்ரோல் அப்துல்லா பிணை வழங்க மறுத்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை மார்ச் 16-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Related News