ஷா ஆலாம், ஜனவரி.30-
ஷா ஆலாம் எல்ஆர்டி3 ரயில் திட்டத்தின் 22 இரயில் பெட்டிகளில் முதல் தொகுதியைச் சேர்ந்த 5 பெட்டிகள் தொழில்நுட்பக் கோளாறுகள் இன்றி FFR சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக Prasarana Malaysia தெரிவித்துள்ளது. மீதமுள்ள அனைத்து இரயில் பெட்டிகளுக்கான FFR சோதனைகளும், இறுதி ஆய்வு மற்றும் மென்பொருள் மேம்படுத்தல்களும் பிப்ரவரி 28-க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அனைத்து 22 இரயில் பெட்டிகளும் சோதனை செய்யப்பட்ட பிறகு, அவை தரைப் பொதுப் போக்குவரத்து முகமையான APAD பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்குகிறதா என்பதை உறுதிப்படுத்த இறுதி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
இந்தச் சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த பின்னரே, பொதுமக்களின் பயன்பாட்டிற்கான அதிகாரப்பூர்வ உரிமம் கோரப்படும் என Prasarana Malaysia தெரிவித்துள்ளது.








