கோத்தா கினபாலு, ஆகஸ்ட்.03-
மலேசியா ஏர்லைன்ஸ் 30 புதிய போயிங் விமானங்களைக் கொள்முதல் செய்யும் முடிவு, நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையின் மேம்பட்ட நிதி நிலைமையைக் காட்டுகிறது எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இந்த நடவடிக்கை அமெரிக்காவுடனான நாட்டின் வர்த்தக உறவை வலுப்படுத்தியதுடன், மலேசியாவிற்கான அமெரிக்காவின் கட்டணங்களை 19 விழுக்காடு குறைத்ததாக அவர் பெருமிதத்துடன் கூறினார்.
கடந்த ஆண்டு முதல் முறையாக இலாபம் ஈட்டிய மலேசியா ஏர்லைன்ஸ், இந்த கொள்முதல் மூலம் தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்தி, நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையையும் புத்திசாலித்தனமான நடவடிக்கையையும் வெளிப்படுத்துகிறதாக பிரதமர் மேலும் கூறினார்.








