Jul 30, 2026
Thisaigal NewsYouTube
நீர் பயன்பாட்டை பத்து விழுக்காடு குறைக்கிறது பினாங்கு
தற்போதைய செய்திகள்

நீர் பயன்பாட்டை பத்து விழுக்காடு குறைக்கிறது பினாங்கு

Share:

பினாங்கு,ஜூலை 27-

பினாங்கு மாநிலத்தில் மழையின்றி வறட்சி நிலை தொடர்வதால், மாநிலத்தில் உள்ள பதிவு பெற்ற 5 லட்சத்து 93 ஆயிரத்து 255 வீட்டுப் பயனர்கள் அன்றாட நீர் பயனீட்டில் பத்து விழுக்காட்டு நீரை குறைத்துக்கொள்ளும்படி பினாங்கு நீர் விநியோக கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மாநில மக்கள் நீர் தட்டுப்பாடு நெருக்கடியை எதிர்நோக்காமல் இருப்பதற்கு வரும் செப்டம்பர் மாதம் மழை காலம் வரையில் தாங்கள் பயன்படுத்தும் நீர் தேவையில் பத்து விழுக்காட்டை குறைத்துக்கொண்டால் நடப்பு நெருக்கடியை சமாளிக்க முடியும் என்று பினாங்கு நீர் விநியோக கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி கே. பத்மநாபன், பினாங்கு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

அன்றாட நீர் பயனீட்டில் பத்து விழுக்காடு நீர் குறைத்துக்கொள்வது மூலம் பினாங்கு மாநிலத்தில் ஒட்டுமொத்த அளவில் நாள் ஒன்றுக்கு 5 கோடி லீட்டர் நீரை சேமிக்க முடியும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை