நெகிரி செம்பிலானில் உள்ள 169 பள்ளிகளை உள்ளடக்கிய கழிவறை சீரமைப்புத் திட்டம் கடந்த மாத இறுதியில் முழுமையாக நிறைவடைந்தது.
நெகிரி செம்பிலான் மாநில முதல்வர் டத்தோ செரி அமினுடின் ஹருன் இவ்விவகாரம் குறித்து தெரிவிக்கையில், மாநில மேம்பாட்டு அலுவலகத்துடன் நடத்திய கலந்துரையாடலில், ஏறத்தாழ 70 முதல் 80 குத்தகையாளர்கள் சம்பந்தப்பட்ட இந்தத் திட்டம் சிறப்பாக நடந்ததாகக் கூறினார்.
காலத்தோடு வேலைகளை நிறைவு செய்த அனைத்துக் குத்தகையாளர்களுக்கும் தமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்த அமினுடின் ஹருன், பிரதமர் துறையின் அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவு ஐ.சி.யு வின் மேற்பார்வையின் இந்தத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.








