Sep 26, 2026
Thisaigal NewsYouTube
புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு
தற்போதைய செய்திகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

Share:

கோலாலம்பூர், மே.18-

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் அதிகமாக இருந்த போதிலும், நீடித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு சேதங்கள் காரணமாக அதன் விலை தொடர்ந்து ஒரு பேரலுக்கு 80 முதல் 90 அமெரிக்க டாலர் என்ற உயர் மட்டத்திலேயே நீடிக்க வாய்ப்புள்ளது என்று MARC Ratings தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மோதல்களால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் காப்பீட்டுக் கட்டண உயர்வு, எரிசக்தி இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளைப் பெரிதும் பாதிக்கும். மலேசியாவைப் பொறுத்தவரை, வர்த்தக மந்தநிலை நிகர ஏற்றுமதியைப் பாதிக்கலாம் என்றும், விமானக் கட்டண உயர்வு மற்றும் உற்பத்திச் செலவு அதிகரிப்பால் சுற்றுலாத் துறை மற்றும் பணவீக்க அழுத்தம் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சவாலாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related News