May 18, 2026
Thisaigal NewsYouTube
முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்
தற்போதைய செய்திகள்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

Share:

கோலாலம்பூர், மே.18-

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சியை (TVET) வலுப்படுத்துவதற்காக, Multimedia பல்கலைக்கழகம் மற்றும் Huawei Technologies நிறுவனத்துடன் கல்வி அமைச்சு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இந்த ‘TVET-AI’ திட்டம் முதற்கட்டமாக இந்த ஆண்டு ஐந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு, பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

சிலாங்கூரில் உள்ள Sekolah Menengah Sains Banting, திரெங்கானுவில் உள்ள Sains Setiu, மலாக்காவில் உள்ள Sains Alor Gajah, சரவாக்கில் உள்ள Sains Kuching மற்றும் பினாங்கில் உள்ள Sains Tun Syed Sheh Shahabudin ஆகியவையே அந்த ஐந்து பள்ளிகளாகும். எதிர்காலத் தொழில்நுட்பத் திறன்களோடு கல்வித் தரத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கல்விச் சீர்திருத்தத்திற்கான அமைச்சின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த ஒத்துழைப்பு பிரதிபலிப்பதாக அது குறிப்பிட்டது.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 'Huawei சான்றளிக்கப்பட்ட ICT Associate- செயற்கை நுண்ணறிவு' தொழில்முறை சான்றிதழ் மூலம் மாணவர்களின் வேலை வாய்ப்புத் திறனை அதிகரிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும், இந்தத் திட்டம் 13-வது மலேசியத் திட்டம் (13MP) மற்றும் மலேசியக் கல்விப் Blueprint 2026-2035 ஆகியவற்றின் இலக்குகளுக்கு ஏற்ப, எதிர்காலத் திறமையாளர்களை உருவாக்குவதையும் தொழில்முனைவோர்-கல்வித்துறை இடையிலான கூட்டாண்மையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Related News