Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மக்களின் பொது வசதிக்காக 50 கோடி வெள்ளி ஒதுக்கீடு
தற்போதைய செய்திகள்

மக்களின் பொது வசதிக்காக 50 கோடி வெள்ளி ஒதுக்கீடு

Share:

மக்கள் வசதிகள் முன்முயற்சி எனப்படும் ஐகேஆர் திட்டத்தை தொடங்குவதற்கு அரசாங்கம் 50 கோடி வெள்ளி மானியத்தை ஒதுக்கியுள்ளது. பொது வசதிகளைப் பெறுவதற்கும், சரிசெய்வதற்கும் அல்லது பராமரிப்பதற்கும் இந்த ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிதியைப் பெற பொதுமக்களும் அரசு நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.

இது பொது வசதிகளை உள்ளடக்கியிருக்க வேண்டும். அதை வாங்குவதற்கு அல்லது சரிசெய்வதற்கு எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டாலும், சிக்கல் கவனிக்கப்படாமல் இருக்குமாயின், அது குறித்த முறையான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு பொதுமக்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் இது இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் முடிக்கக்கூடிய திட்டமாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, நீண்ட கால திட்டமாக இருக்கக் கூடாது என்று ரஃபிஸி ரம்லி விவரித்தார்.

Related News