Dec 4, 2025
Thisaigal NewsYouTube
வேப் மின் சிகரெட்டிற்கு முற்றாகத் தடை விதிக்கப் பரிசீலனை
தற்போதைய செய்திகள்

வேப் மின் சிகரெட்டிற்கு முற்றாகத் தடை விதிக்கப் பரிசீலனை

Share:

கோலாலம்பூர், ஜூலை.28-

நாட்டில் வேப் மின் சிகரெட்டிற்கு முற்றாகத் தடை விதிப்பது குறித்து சுகாதார அமைச்சு பரிசீலனை செய்து வருவதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

எனினும் வேப் மின் சிகரெட் முற்றாகத் தடை விதிப்பதற்கு முன்னதாக, சட்டம், அமலாக்கம், பொது சுகாதாரம் ஆகியவற்றில் ஏற்படக்கூடிய தாக்கம் உட்பட பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்தத் தடை மீதான அமலாக்கத்தை மிகக் கவனமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்லி குறிப்பிட்டார்.

தற்போது கட்டுப்பாட்டில் உள்ள நடவடிக்கைகளின் செயல்திறனை மதிப்பீடு செய்வதற்கும், ஒட்டுமொத்த மக்களின் சுகாதார நலன்களைப் பாதுகாக்க இன்னும் விரிவாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஆராய்வதற்கும், நடப்புக் கொள்கையில் தேவையான சீர்திருத்தங்களைச் செய்வதற்கும், தற்போது விரிவான ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக இன்று நாடாளுமன்ற மக்களவையில் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்லி இதனைத் தெரிவித்தார்.

Related News