கோலாலம்பூர், செப்டம்பர்.25-
தாம் உருவாக்கிய ஆபாச வீடியோ படத்தைத் தன்னுடைய X தளக் கணக்கில் பதிவேற்றம் செய்த குற்றத்திற்காகப் பொதுப் பல்கலைக்கழக மாணவன் ஒருவனுக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று பத்தாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
24 வயது ஐடில் அக்மால் அஸார் என்ற அந்த மாணவன், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி சுஹைலா ஹரோன் இந்த அபராதத் தொகையை விதித்தார்.
அந்த மாணவன், கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் முதல் தேதி இரவு 10.45 மணியளவில் ஷா ஆலாமில் உள்ள தனது வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








