ஃபோர்க்லிஃப்ட் எனப்படும் பாரந்தூக்கி வண்டி தடம்புரண்டதில் அதன் அடியில் சிக்கிய தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். இச்சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை 12.35 மணியளவில் கிள்ளான், புக்கட் ராஜா தொழிற்பேட்டையில் நிகழ்ந்தது. உள்ளூர் தொழிலாளியான 18 வயதுடைய அந்த இளைஞர் , தலையில் பலத்து காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை ஒருங்கிணைப்பாளர் அஹ்மாட் முகிஸ் முக்தார் தெரிவித்தார்.
ஃபோர்க்லிஃப்ட் அடியில் அந்த தொழிலாளி சிக்கியதால் அந்த கனரக வாகனத்தை அகற்ற, ஐவர் கொண்ட தீயணைப்பு,மீட்புப்படையினரின் பலம் பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். சவப்பிரசோதனைக்காக அத்தொழிலாளியின் உடல் பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.








