Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தண்ணீரை சேமிக்குமாறு பினாங்கு மக்ககள் அறிவுறுத்தப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

தண்ணீரை சேமிக்குமாறு பினாங்கு மக்ககள் அறிவுறுத்தப்பட்டனர்

Share:

பினாங்கில் வசிக்கும் மக்கள், தங்கள் அன்றாட பயன்பாட்டிற்காக தண்ணீரை சேமித்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பினாங்கில் பல பகுதிகளில் சுங்கை மூடா ஆற்று நீர் கலங்களாக இருப்பதால் நீர் விநியோகம் அடிக்கடி தடைப்படுவதாக மாநில முதலமைச்சர் சௌ கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு கெடா மாநிலத்தில் பாலிங் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது பினாங்கிற்கான நீர் விநியோகத்தில் மாசுபாடு ஏற்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். நீர் விநியோகம் அதிக கலங்களாக இருக்கும் பட்சத்தில் அதனை மறுபடியும் சுத்திகரிக்க வேண்டிய நிலை இருப்பதாக முதலமைச்சர் விளக்கினார்.

Related News