Oct 16, 2026
Thisaigal NewsYouTube

போதைப்பொருளில் சைகோக்டிவ் மருந்து கலக்கப்படுவது மிகப்பெரிய சவால்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போதைப்பொருளில் சைகோக்டிவ் மருந்து கலக்கப்படுவது மிகப்பெரிய சவால்

கோலாலம்பூர், டிச.14-


போதைப்பொருள் தயாரிக்கப்படுவதற்கு தற்போது சைகோக்டிவ் எனும் உளவியல் மருந்து பயன்படுத்தப்பட்டு வருவது, போதைப்பொருள் தொடர்புடைய குற்றச் செயல்களை துடைத்தொழிக்கும் முயற்சியில் அரச மலேசிய போலீஸ் படை மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கி வருவதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் பேர்வழிகள், போதைப்பொருள் தயாரிப்பதற்கு மனநோய் தொடர்புடைய மருந்து கலவையை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. ரசாயன கலவையை மாற்றிக்கொள்ளும் முறையின் கீழ் அவ்வகை மருந்து போதைப்பொருளில் கலக்கப்படுகிறது. இந்த உக்தியின் மூலம் போதைப்பொருள் தன்மையையும், அதன் கடுமையையும் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக என்று ஐஜிபி விளக்கினார்.

மிகக்கடினமாகி வரும் போதைப்பொருள் குற்றச்செயல்களை துடைத்தொழிக்கும் முயற்சிக்கு தீர்வு காணும் வகையில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத் தொழிப்பு பிரிவு, மலேசிய தேசிய பல்லைகலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் அது தொடர்பான ஆய்வை மேற்கொண்டு வருவதாக ஐஜிபி விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →