கெடா, குருனில் 67 வயது மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தபோது, துப்பாக்கி போன்ற பொருளைக் காட்டி மிரட்டப்பட்டு, 23 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான தங்க நகைகள் பறிக்கப்பட்டுள்ளன.
நேற்று வியாழக்கிழமை காலை 9.20 மணியளவில் தாமான் ஶ்ரீ ஜெராய் 2-ல் இந்தச் சம்பவம் நடந்தது. சுமார் இரண்டு வாரங்கள் கண்காணித்த பின்னர் சந்தேக நபர் வீட்டுக்குள் புகுந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக 41 வயது ஆடவர் ஒருவர் அன்று இரவு 11.15 மணியளவில் கைது செய்யப்பட்டார். விசாரணையில், கணவர் வீட்டைவிட்டு வெளியேறியதைப் பார்த்த பின்னர் தனியாக கொள்ளையில் ஈடுபட்டதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
மூதாட்டியின் இரு கைகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. சந்தேக நபருக்கு முந்தைய குற்றப் பதிவுகள் இல்லை. இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் 392 மற்றும் 397ஆவது பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்படுகிறது.








