Aug 6, 2026
Thisaigal NewsYouTube
லோரிக்குள் ஆடவரின் சடலம், ஓட்டுநர் கைது
தற்போதைய செய்திகள்

லோரிக்குள் ஆடவரின் சடலம், ஓட்டுநர் கைது

Share:

தனது நண்பரை அடித்துக் கொன்றப் பின்னர் சடலத்தை லோரியில் ஏற்றிக்கொண்டு சென்றதாக நம்பப்படும் நபரை போ​லீசார்​ கைது செய்துள்ளனர்.

நேற்று அதிகாலை 1.41 மணியளவில் சிப்பாங், ஜாலான் உபிஎம் டத்தோ அபு பாகார் பகின்டாவில் வேகமாக சென்று கொண்டிருந்த லோரி ஒன்றை மடக்கிய ரோந்து கார் போ​லீசார், அந்த லோரியை சோதனையிட்ட போது, சுயநினைவு இழந்த நிலையில் ஆடவர் ஒருவர் கிடத்தி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

போ​லீசார் உடன் செல்ல அந்த லோரி, செர்டாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அந்த ஆடவர் ​கீழே இறக்கப்பட்டு, மருத்துவமனை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர் இறந்து விட்டது உறுதி செய்யப்பட்டதாக சிப்பாங் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி வான் கமாருல் அஸ்ரான் வான் யூசோஃப் தெரிவித்தார்.இச்சம்பவம் தொடர்பில் அந்த லோரியை செலுத்திய 41 வயது நபர் கைது செய்யப்​பட்டுள்ளார். மரணமுற்ற 43 வயது நபர், திடமான பொருள் ஒன்றினால் தலையிலேயே அடித்து கொல்லப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக ஏசிபி வான் கமாருல் குறிப்பிட்டார். கைது செய்யப்பட்ட​​ லோரி ஓட்டுநரும், உயிரிழந்த நபரும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’