டெங்கில், நவம்பர்.24-
சிலாங்கூர், டெங்கிலில் இன்று திங்கட்கிழமை இரவு 8.20 மணியளவில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது. இதில் ஓர் இந்திய இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான நபர், சம்பவ இடத்திலேயே மாண்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் போலீசார் அறிக்கை வெளியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








