Jun 30, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த போலி தகவல்: ஐவருக்கு எதிராக எம்.சி.எம்.சி விசாரணை
தற்போதைய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த போலி தகவல்: ஐவருக்கு எதிராக எம்.சி.எம்.சி விசாரணை

Share:

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து தவறான தகவல்கள் பரப்பியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேருக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மலேசிய தொலைதொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்.சி.எம்.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த ஐந்து பேரில் மூவரை அழைத்து அவர்களிடம் விளக்கங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.சி.எம்.சிக்கு கிடைத்த புகார்களின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள், சமூக ஊடகமான திரெட்ஸ் பகிர்ந்த எரிபொருள் விலை உயர்வு தொடர்பான தகவல்கள் தவறானவை மற்றும் பொதுமக்களில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேலும், புல்லட்டின் டிவி3 காட்சிகளுடன் கூடிய அத்தகவலானது போலியான திருத்தப்பட்ட ஒன்று என்றும், புல்லட்டின் டிவி3 அளித்த புகாரின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் எம்.சி.எம்.சி தெரிவித்துள்ளது.

Related News