Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சமூக ஊடகங்களில் அவதூறு,வெறுப்புணர்வைத் தூண்டுவதை நிறுத்துங்கள்
தற்போதைய செய்திகள்

சமூக ஊடகங்களில் அவதூறு,வெறுப்புணர்வைத் தூண்டுவதை நிறுத்துங்கள்

Share:

ஈப்போ, செப்டம்பர்.05-

சமூக ஊடகங்களில் அவதூறு மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டக்கூடிய கருத்துகளைப் பகிர்வதை நிறுத்திக் கொள்ளுமாறு முஸ்லிம்களை மேன்மை தங்கிய பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா கேட்டுக் கொண்டார்.

இது போன்ற செயல்களால் மக்களிடையே பிளவுகளும், பேதங்களும் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் பழக்க வழக்கங்களுக்கும், மலாய்க்கார சம்பிரதாயங்களுக்கும் இடையே முரணான ஒரு கலாச்சாரத்தை உருவாக்கி, மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்களுக்கு எதிராக சமூகம், அனுதினமும் அவமானத்திற்கும், இழிவுக்கும், கேளிக்கும் உரிய வார்த்தைகளால் அவமதிப்புக்கு ஆளாகி வருவதாக சுல்தான் நினைவுறுத்தினார்.

பக்தி இல்லாவிட்டால் தட்டச்சு செய்யும் விரல்களும், சொல்லாடலுக்குரிய நாவும் கட்டுப்படுத்தப்படாத தீங்கின் சாதனங்களாக மாறிவிடும் என்று சுல்தான் நஸ்ரின் ஷா நினைவுறுத்தினார்.

இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முகமது நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மீலாது நபி விழாவையொட்டி ஈப்போவில் நடைபெற்ற நிகழ்வில் பேரா சுல்தான் இதனைத் தெரிவித்தார்.

Related News