Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பாம்பு தீண்டவில்லை, புலி தாக்கியது.
தற்போதைய செய்திகள்

பாம்பு தீண்டவில்லை, புலி தாக்கியது.

Share:

கெரிக்,ஜன.16
பேரா, கெரிக், புக்கிட் பெலிய, கம்போங் பஹிட் டலாம்மில் உள்ள கால்நடை வளர்க்கும் 39 வயது ஆடவரான முஹமாட் சஹாருல் அசார் மாட் சாலி, தமது இரு மாடுகள் புலியால் தாக்கப்பட்டதில், 5 ஆயிரம் வெள்ளி இழப்பைச் சந்தித்துள்ளார்.

நேற்று நடந்த இச்சம்பவத்தில், அவை பாம்பு தீண்டியதாக் இறந்திருக்கும் எனக் கருதியதாகவும் ஆனால், மாடுகளின் கழுத்தில் கடிக்கப்பட்டக் காயம் இருந்ததைத் தாம் கண்டறிந்ததாகவும் முஹமாட் ஷாருல் குறிப்பிட்டார்.

சுற்று வட்டாரப் பகுதியில், புலியின் கால் தடம் இருப்பது தெரிய வந்ததும் வனவிலங்கு, வனப்பூங்கா பாதுகாப்பு துறைக்குத் தெரிவிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், தமது கால் நடை வளர்ப்புப் பிராணிகளை புலி தாக்கியது இதுவே முதல் முறை என்ற முஹமாட் ஷாருல், இப்பகுதி பாதுகாப்பு இல்லாததால், தமது இதர 26 கால்நடை வளர்ப்புப் பிராணிகளை வெகு விரைவில் இடமாற்றம் செய்ய இருப்பதாக முஹமாட் ஷாருல் சொன்னார்.

மேலும், புலியின் நடமாட்டத்தால், இங்குள்ள இரப்பர், வாழைத் தோட்டங்களில் அதன் உரிமையாளர்கள் உள்ளே செல்ல அச்சப்படுவதாகவும் முஹமாட் ஷாருல் குறிப்பிட்டார்.

இதனிடையே, பேரா மாநில PERHILITAN இயக்குநர் யூசோஃப் ஷாரிஃப் இச்சம்பவம் குறித்து உறுதிப்படுத்தினார்.

Related News

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

அதிர வைத்த "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" பிரம்மாண்ட தொடக்கவிழா!

அதிர வைத்த "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" பிரம்மாண்ட தொடக்கவிழா!

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்