பண்டார் சன்வேயில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட மோதலில் மூன்று ஆடவர்கள் காயமடைந்துள்ளனர்.
ராக் கேபே உணவகத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து காலை 6.16 மணிக்கு போலீசாருக்குப் புகார் கிடைத்ததாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் வான் அஸ்லான் வான் மாமத் தெரிவித்தார்.
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தவறான புரிதலே இந்த மோதலுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதாக இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வரும் வேளையில், சம்பந்தப்பட்ட நபர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் இதுகுறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.








